Monday, January 12, 2009

தமிழா


தமிழன் என்ற அடை மொழியை அகற்ற நாம் என்ன இறைவனிடம் வரமா கேட்க முடியும் அதர்மத்தை அகற்ற அஸ்திரம்தான் வழியென நாம் கீதையில் கற்றதுண்டு நாம் வாழும் நரகத்தில் நமது இடம் அகதியின் உறைவிடம் அதை அஸ்தமனம் ஆக்க ஆண்டவா எம்மை ஆளவிடு என கடவுளை வேண்டினால் காரியம் ஆகாது கடலாலே வந்த அந்த கயவர் கூட்டம் எம் நிலத்தை களவாடி இட்ட அந்த சிங்க கொடியை தறித்திட வேண்டும் மீண்டும் தமிழ் தழைத்திட வேண்டும் தமிழர் தலை நிமிர்ந்திட வேண்டும் விதியே கதியே என எண்ணி உன் கதியை அவர் கையில் இட்டால் சதியால் உன் நிலத்தை சூறயாடிடுவார் சந்ததி வாழ ஒரு துண்டு நிலத்தையும் தரமாட்டார் சங்கத்தால் வழர்த்த மொழி பேச சங்கடம் வரும் என்று மறக்கிறாய் சொந்த முகவரி மறைக்க முகவரி தேடி அலைகிறாய் போதும் தமிழா போதும் நீ பட்ட துன்பம் வாழ்கையில் வட்டம் உண்டேல் அதில் தோல்விக்கே இடம் ஒன்று உண்டு நம்பிக்கையுடன் தலை தலைதூக்கு இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்து வெற்றிகள் உனை வந்து சேரும் தோல்விகள் தனியென மறையும் நீயும் இப் பூமியில் வாழவே தோற்றவனாய் சாவதற்கு அல்ல

தமிழீழம்


நேற்றொரு கிழக்குத் தீமோர் இன்றொரு கொசோவா நாளை எம் தமிழீழம் என்பதை நீ நம்புக ! இது ஒன்றும் கற்பனையின் வரியல்ல காலத்தின் பதிவாகி எம் தேசத்து வரலாறாய் வருகின்ற நாட்களில் நிச்சயம் பதிவாகும் ! பதிவாக நாமெல்லாம் ஒன்றாக ஒருகொடியில் நன்றே நாம் திரண்டாலே நாளை இவ்வுலகை நம் கையில் தானெடுத்து எங்கள் துயர்மாற்றி எல்லைகளை தொடலாமே ! விடுதலை என்பதொன்றும் கடுகதியாய் கிடைக்காது எம் காவலனின் காலமதில் தமிழீழமது பதிவாகும் ! தமிழீழம் பதிவாக தக்கதொரு பங்காற்ற புலத்துத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் ஒன்றாக கை கோர்த்து உலகில் எமக்கான ஒரு நாட்டை அமைப்போமே ! தன் மானத் தமிழினமே மண் மானம் காப்பதுவே மகத்தான கடைமையன்றோ

இழந்த நிலம் மீட்கணும்!


வெளிநாடு தமிழர்கள் -ஈழம்மொன்றே வேண்டுமெனநினைத்து, வருந்தியுழைக்கும்பணத்தை நின்மதியானஎதிர்காலத்திற்கு –வீரமறவர்என்றல்லோ கொடையாகயளிக்கின்றனர்..குருதி சிந்திப் பிடித்த நிலம்குருதி சிந்தி இழக்கும் நிலைமாற்றம் பெற்று.. இழந்த நிலம்மீண்டும் தமிழ் வீரர்களின் கையில்வந்து சேரணும்.. மீட்கப்படணும்..அல்லாவிடில் சிந்திய குருதியிலும்சிந்திய வேர்வையிலும் பிரியோசனமில்லைஉந்தன் சிந்தனையால் முடியாததெதுவுமிலை..உமைத் தோற்கடிக்க முடியாதென்றொருநிலையை உருவாக்கி பஷ்பமாக்கணும்அதைப் பார்த்து உலக வாழ் மக்காள்மூக்கில் விரலை வைக்கணும் -ஏனோதானோயென்ற பேச்சுக்கு வாய் திறவாதிருக்கமறவர்படையணி மூர்க்கம் பெறணும்..அழிகின்றது.. அழிகின்றதென்பவர்க்குஅமைகிறது இதோ அமைகின்றதென்றசொற்பதமெழ எதிரியோடியவனிடம் சேரஅடி மேல் அடியமையணும் -அதுவேமறவரையுயர்த்தும் அடியாகும்..இதென்ன புலிகளை பிரதிநியென்றோம் -அதுபிரண்டுபோயுள்ளது என்ற வார்த்தையெந்ததமிழன் வாயிலுமொலிக்கக் கூடாதென்பதுஎனது வாதமாக நினைத்திதை ஒப்புவிக்கின்றேன்அவர்களின் ஆதங்கமெனை ஆத்திரமடையச் செய்கின்றது..சிறு வயதிலிருந்து குருதியிலோடிய புலிச்சத்துசிறுமையாக கதைப்பதைப்பார்க்க முடியுமா? அல்லாதுகாதால் கேட்கத்தான் முடியுமா? எது எப்படியோ!காலாறாது ஓடியவனும்.. ஓடுவது போல் நடித்தவனும்காலுக்கு மேல் கால் போட்டு ஆயிரம் பேசலாம்.. –ஆனால்ஒருவேளை உணவு பயிற்சியின் போது எப்படிக்கிடைத்ததுயென்பதறிந்தவனுக்கு அந்த உணவின் ஜீரணமின்னுமிருக்கும்அதையுணர்ந்தவன் துரோகியாகமாட்டான்.. காலிழந்தாலும்கட்டையில் போகும்வரை மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்உயிரைக்கொடுப்பானென்பது எனது திண்ணம்.. –பகட்டுக்கும்பக்கயுழைப்புக்குமாக சேர்ந்தவன்.. உண்டவன்.. கதைத்தவன்போலியென்பதை நிரூபித்தே தீருவான்.. –அவனைஅரசாக இருந்தாலும் சரி.. மாற்றியக்கமாக இருந்தாலும் சரி..சேர்த்துக் கொண்டால் சந்தேகக்கண் கொண்டே பார்க்குமே தவிரநல்லெண்ணத்துடன் நன்மை செய்யப் போவதில்லை.. –மாற்றானுக்குதீங்கிழைத்தவன் தனக்குத் தீங்கிழைக்க மாட்டானென்பது.. என்ன நியதியென்கிறேன்? சிந்தியுங்கள் புரியும்.. சந்தியுங்கள் துலங்கும்..உலகம் வாழ் தமிழ் மக்கள் வாழ்வதுதமக்கென சுதந்திரமான பூமி கிடைக்கும் -அதில் எவராயினும் தலையிடாது தலை சாய்த்து நின்மதியாக ஒரு தூக்கம் தூங்கணும் என்பதுதான்.. வளர்த்ததை அழித்துவிட்டான்.. இனி வளர்க்க..?

வெளிநாடு


வெளிநாடு குளிர் கால ஆலாபனைகள். மரங்கள் மஞ்சள் ஆடையில் ஆதவன் ஒளிந்து காணவில்லை. வானமோ அழுது வழிந்தபடி. முக்காடு போட்ட முகமூடி மனிதர்கள். இதுதான் வெளிநாடு... வெளிறிய அவிந்த முகங்கள். ஆணா பெண்ணா அறியமுடியா அறிமுகமற்ற அரை குறை அளவலாவல். காதிருந்தும் கேட்காத வாயிருந்தும் பேசாத நாடு இருந்தும் நாடோடிகளாய் நாம். திட்டுகிறானா பேசுகிறானா அணைக்கிறானா அழைக்கிறனா புரியாத புதிய பத்துப் பாஷைகள். இதுதான் வெளிநாடு... நாய்க்கு உணவா நமக்கு உணவா நாலு பாஷையில் எழுதியிருந்தும் புரியவில்லை யாருக்கு என்று. பனியில் உறைகிறோமா மழையில் குளிக்கிறோமா மூக்கும் காதும் விறைத்துவிட பாதத்தில் பாரமாய் பாதணிகளைச் சுமந்தபடி. மனம் விம்மினாலும் பணம் பணம் என்று பிணமாய் திரிகிறோம். மாத முடிவில் மொத்தமாய் கட்டுகின்ற வீட்டு வாடகை முதல் காப்புறுதிகள் வரை. மிஞ்சுவதோ மொய் எழுத. இதுதான் வெளிநாடு... மின்சார மயத்தில் இரவும் பகலும் கூட இரவல் பொழுதாகி மணிக்கூட்டு முட்களோடு நாமும் முண்டி ஓட தொலைந்த நேரங்கள் கலைந்த நின்மதிகள் வராத வசந்தங்கள் தேடினாலும் கிடைக்காமல் தூர நின்று கை காட்டும். வெளிநாடாம் இது! இங்குதான் சொர்க்கமாமே! சொந்த நாட்டில் சுகங்களைத் தொலைத்துவிட்ட பரதேசிகள் நாம். ஈழத் தமிழனின் விதியில் திணித்துவிட்ட சங்கதியில் இதுவும் ஒன்று.